மேலும் செய்திகள்
வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளை
17-Jul-2026
ரேஸ்கோர்ஸ்: பாப்பநாயக்கன்பாளையம் ரோகித்குமார், 24 வீட்டில் உறங்கும்போது இளைஞர் ஒருவர் ஜன்னல் வழியாக போனை திருடினார். புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரித்து, மொபைல் திருடிய ராமநாதபுரம் விஜய், 19 என்பவரை கைது செய்தனர். பூட்டிய வீட்டில் கொள்ளை வடவள்ளி: வடவள்ளியில் வசிக்கும் பாக்கியலட்சுமியின் பெற்றோர், கல்வீரம்பாளையம் எஸ்.பி.கே.நகரில் உள்ளனர். ஜூலை 11ம் தேதி பெற்றோர் வெளியூர் சென்றனர். வீட்டை பராமரிக்க பாக்கியலட்சுமி அடிக்கடி சென்றார். ஜூலை 30ம் தேதி முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ஏழு சவரன் தங்க, சில்வர் நகை, விளக்குகள் கொள்ளையடிக்கப்பட்டன. புகாரின்படி போலீசார் விசாரிக்கின்றனர்.
17-Jul-2026