உள்ளூர் செய்திகள்

கிரைம் கார்னர் 

ஆன்லைன் பகுதி நேர வேலை  ஐந்து லட்சம் இழந்த இளைஞர்  கோவை: ஒத்தக்கால்மண்டபம் ஜோதி பிரகாஷ், ஆன்லைன் வாயிலாக பகுதி நேர வேலை தேடி வந்தார். அறிமுகமில்லாத நபர் தொடர்பு கொண்டு, ஆன்லைன் ரெவ்யூ கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறி டெலிகிராமில் இணைத்துள்ளார். ஆரம்பத்தில், ரூ.500 முதல் 5000 வரை கொடுத்துள்ளனர். பின்னர் முழுமையான பணம் கிடைக்க, தொடர்ந்து லட்சங்களில் பணம் கேட்டுள்ளனர். 5.1 லட்சம் ரூபாய் வரை அனுப்பிய பின்னர் சந்தேகம் ஏற்பட்டு, மேற்கொண்டு பணம் அனுப்புவதை நிறுத்தினார். சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.  உரிமை கோராத வாகனங்கள்  பறிமுதல் செய்த போலீஸ்  செல்வபுரம்: போலீசார் தொடர் கண்காணிப்பில், சொக்கம்புதுார் பகுதியில் உரிமை கோரப்படாமல் நிறுத்தப்பட்டு இருந்த, 8 வாகனங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து  வாகன உரிமையாளர்கள் யார் என்று வட்டார போக்குவரத்து துறையினர் உதவியுடன் விசாரித்து, பின்னர் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன.  புகையிலை பொருட்கள் விற்ற ஒருவர் கைது  துடியலுார் போலீசார் ரோந்து பணியின் போது, பார் அருகே உள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிந்து சோதனையிட்டனர். இதில், ஆறு கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, பெட்டிக்கடை உரிமையாளர் கவுதம் என்பவரை கைது செய்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்