மேலும் செய்திகள்
ரயில்வே சந்திப்பில் 14 கிலோ கஞ்சா பறிமுதல்
26-Sep-2024
மேட்டுப்பாளையம் ஜனார்த்தன் நகரை சேர்ந்தவர் மூர்த்தி, 48. இவர் மணியக்காரன் பாளையத்தில் இண்டஸ்ட்ரியல் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். தொழிலில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட, கடன் வாங்கி கம்பெனியை நடத்தி வந்தார். இதனால் மிகுந்த மன அழுத்தத்தில் காணப்பட்டார். இதனிடையே, இவரது மனைவி மற்றும் இரு மகள்கள், கோவையில் உள்ள தங்களது உறவினர்கள் வீட்டிற்கு சென்றனர். வீட்டில் தனியாக இருந்த மூர்த்தி, தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றார். அப்போது வீட்டிற்கு வந்த மனைவி, இதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மூர்த்தியை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டார் என தெரிவித்தனர். இதுகுறித்து, மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.---- கஞ்சா விற்ற மூவர் சிறையில் அடைப்பு
கோவை மாவட்ட எஸ்.பி., உத்தரவின் பேரில், கடந்த இரு நாட்களாக மாவட்டம் முழுக்க, 86 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன், எஸ்.ஐ., ராஜேந்திர பிரசாத் மற்றும் போலீசார் சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது, இடையர் பாளையம் பகுதியில் நடத்திய சோதனையில், 22 கிலோ கஞ்சா சிக்கியது. கஞ்சா பதுக்கிய மூவரை கைது செய்து விசாரணை செய்ததில், கேரள மாநிலம், மலப்புரத்தை சேர்ந்த அப்துல் வாகித்,29, ரிஸ்வான் உல் ஹக், 23, வெள்ளலூரை சேர்ந்த சரவணன், 29, என்பது தெரிந்தது. கஞ்சாவை கடத்தி வந்து சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பது தெரிந்தது.மூவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதேபோல், சட்டவிரோதமாக மது மற்றும் லாட்டரி விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர். விபசார கும்பல் கைது
ஆன்லைனில் விபசாரத்திற்கு அழைப்பு விடுத்த கும்பல் கைது செய்யப்பட்டது.கீரணத்தத்தில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் விபசாரம் நடப்பதாக கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர்.இதில் மதுரையை சேர்ந்த 24 வயது பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. விசாரணையில் ஆன்லைன் வாயிலாக அழைப்பு விடுத்து விடுதிக்கு வாடிக்கையாளர்களை வரவழைத்துள்ளனர்.இதையடுத்து விடுதி உரிமையாளர் வர்கீஸ், 31. விடுதி மேலாளர் சரோஜ் குமார், 31, ஆகியோரை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பெண்ணை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
26-Sep-2024