உள்ளூர் செய்திகள்

கிரைம் செய்திகள்

கஞ்சா விற்ற மூவர் கைது

கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சென்னியாண்டவர் கோவில் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அவ்வழியே வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த ராகேஷ் பஸ்வான், 27 என்பவரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 1 கிலோ, 250 கிராம் கஞ்சாவும், 300 கிராம் கஞ்சா சாக்லெட்களும் சிக்கியது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அந்நபரை கைது செய்தனர்.சூலுார் எஸ்.ஐ., விக்னேஷ் மற்றும் போலீசார், இருகூர் பிரிவு அருகே ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் கைப்பையுடன் வந்த நபரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், ஒரு கிலோ, 150 கிராம் கஞ்சா பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்த போலீசார், வாலிபரிடம் விசாரித்தனர். இருகூர் காமாட்சி புரத்தை சேர்ந்த விஷ்ணு பிரசாத், 25 என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் தொடர் விசாரணை செய்து வருகின்றனர்.சுல்தான்பேட்டை போலீசார், கன்னியாத்தாள் கோவில் குட்டை அருகே கஞ்சா விற்ற நபரை கைது செய்தனர். செஞ்சேரி புத்தூரை சேர்ந்த இஷா கோபியிடம், 1 கிலோ, 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

சார் பதிவாளர் அலுவலகம் முன்பு அடிதடி

அன்னுார் அருகே பிள்ளையப்பம் பாளையத்தில் நான்கு பேருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதில் ஒருவர் நிலத்தை விற்க கோவையை சேர்ந்தவரிடம் ஒப்பந்தம் செய்துள்ளார்.மற்ற மூவரும் இந்த கிரயத்தை பதிவு செய்யக்கூடாது என அன்னுார் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆட்சேபனை மனு அளித்தனர். ஆனால் நேற்று அதையும் மீறி பத்திர பதிவு செய்வதாக தகவல் வெளியானவுடன், எதிர் தரப்பினர் அங்கு வந்து சார்பதிவாளர் அலுவலக நுழைவாயிலில் வாக்குவாதம் செய்தனர்.இதில் இருவருக்கு சரமாரியாக அடி, உதை விழுந்தது. தகவல் அறிந்து அன்னுார் நெடுஞ்சாலை ரோந்து எஸ்.எஸ்.ஐ., கனகராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று இருதரப்பினரையும் விலக்கினர்.சார் பதிவாளரிடம் இதுகுறித்து புகார் செய்தபோது எதிர் தரப்பினருக்கு நோட்டீஸ் அளித்து உரிய விளக்கம் பெற்ற பிறகு பத்திரப்பதிவு செய்யப்படும் என்றார். இதையடுத்து இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி