உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அதிக வட்டி தருவதாக கோடி கணக்கில் மோசடி

அதிக வட்டி தருவதாக கோடி கணக்கில் மோசடி

கோவை: கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:கோவை மாவட்டம் சாய்பாபா காலனியில் இயங்கி வந்த, டிரீம் மேக்கர் குளோபல் பி லிமிடெட் என்ற நிறுவனம், ஆர்.எஸ்.புரத்தில் இயங்கி வந்த ஆதித்யா கமாடிட்டீஸ் நிறுவனம், ரேஸ்கோர்ஸ்சில் இயங்கி வந்த எஸ்.கே.எம்., டிரேடர்ஸ் என்ற நிறுவனம் மற்றும் பொள்ளாச்சியில் இயங்கி வந்த ஆனைமலை சிட்ஸ் (பொள்ளாச்சி) பி லிமிடெட் நிறுவனம் ஆகிய நிறுவனங்களின் இயக்குனர்கள், பொதுமக்களிடமிருந்து முதலீட்டை பெற்றுள்ளனர்.அந்த முதலீட்டிற்கு அதிக வட்டி தருவதாக கூறி, இதுவரை ஏராளமானோரிடம் கோடி கணக்கான ரூபாய் பணத்தைப் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து, கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.எனவே இந்நிறுவனத்தினரால் பாதிக்கப்பட்ட நபர்கள், தகுந்த ஆவணங்களுடன் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள, பொருளாதார குற்றப்பிரிவை அணுகி, புகார் அளிக்கலாம்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை