உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கலர் அப்பளத்தை நொறுக்கி குப்பையில் போடுங்க!

கலர் அப்பளத்தை நொறுக்கி குப்பையில் போடுங்க!

கலர் கலராக விற்பனை செய்யப்படும் வடாம் வத்தல்களிலும், ஆபத்து நிறைந்துள்ளதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதியானதால், பஞ்சு மிட்டாய் விற்பனை, தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. பஞ்சு மிட்டாய்க்கு அடுத்தபடியாக, இன்று குழந்தைகள் அதிகம் விரும்பி உட்கொள்ளும் குடல் அப்பளம், வத்தல்களிலும் அதிக நிறமிகள் சேர்க்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது. அதிகளவு நிறமிகள் சேர்க்கப்படும், வத்தல்களை உட்கொள்வதால், அதிக உடல் உபாதைகள் ஏற்படும் என்கின்றனர் டாக்டர்கள்.குடல், இரைப்பை நோயியல் துறை நிபுணர் அருள்செல்வன் கூறுகையில், ''பொதுவாக அப்பளங்களில் அதிக உப்பு இருக்கும். இதை தொடர்ந்து உட்கொள்வதால், ரத்தக்கொதிப்பு அதிகரிக்கும். எண்ணெயில் பொரித்து சாப்பிடுவதால், கொழுப்பு அதிகரிக்கும். இதில் கூடுதலாக அதிக நிறமிகள் சேர்க்கப்படுவதால், சிறுகுடல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. அத்துடன் 'அல்சர்', இரைப்பை அலர்ச்சி, புண் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். பெருங்குடலிலும் பாதிப்பை ஏற்படுத்தும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை