உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விவசாய நிலங்களில் குழாய் பதிப்பால் பாதிப்பு

விவசாய நிலங்களில் குழாய் பதிப்பால் பாதிப்பு

கோவை; விவசாய நிலங்களுக்குள் செல்லும், எண்ணெய் குழாய் பதிப்பு பணியை, சாலையோரமாக மாற்ற விவசாய குறைத்தீர் கூட்டத்தில், மனு அளிக்கப்பட்டது.பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில், ஐ.டி.பி.எல்., நிறுவனம் இருகூரில் இருந்து, கர்நாடக மாநிலம் தேவளகொந்தி வரை 320 கி.மீ., எண்ணெய் குழாய் பதிக்கும் பணியை மேற்கொண்டது. இதில் கோவை இருகூரிலிருந்து திருப்பூர் மாவட்டம் முத்துார் வரையிலான, 70 கி.மீ., தூரத்துக்கு விவசாய நிலங்களுக்கு இடையேகுழாய் கொண்டு செல்லப்படுவதால், விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த ஓராண்டுகளாக இதுகுறித்து, பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் சரியான தீர்வு ஏற்படுத்தி தரப்படவில்லை என, விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இப்பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வலியுறுத்தி, கோவை கலெக்டரிடம் நேற்று நடந்த விவசாய குறைத்தீர் கூட்டத்தில், ஐ.டி.பி.எல்., திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கம் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை