ஆன்லைன் விளையாட்டுகளால் ஆபத்து; விழிப்புணர்வுக்கு உத்தரவு
கோவை; ஆன்லைன் விளையாட்டுகளின் ஆபத்து குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்த, கல்லுாரிகளுக்கு தொழில்நுட்ப இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.ஆன்லைன் விளையாட்டுகளில் மாணவர்கள் ஈடுபடுவதால், அவர்கள் மனரீதியாக பாதிக்கப்படுவதாகவும், சிலர் தற்கொலை வரை செல்வதாகவும், புகார்கள் வருகின்றன.இதையடுத்து கல்லுாரிகளில் ஆன்லைன் விளையாட்டுகளால், ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, தொழில்நுட்பக் கல்லுாரி இயக்குனரகம் கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.இதன் ஒரு பகுதியாக, மாணவர்களுக்கு விழிப்புணர்வு கட்டுரை போட்டிகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இணையதள விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகள், அதிலிருந்து மீள்வதற்கான ஆலோசனைகள் குறித்து, எழுத அறிவுறுத்தப்பட்டுள்ளது.இக்கட்டுரையில், இளைஞர்களை மீட்பதற்கு தேவையான கருத்துக்களை தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.