உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பசுமைப்பரப்பை அதிகரிக்க டேனி ஷெல்டர்ஸ் முயற்சி

 பசுமைப்பரப்பை அதிகரிக்க டேனி ஷெல்டர்ஸ் முயற்சி

கோவை: கோவை நகரின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் முக்கிய முயற்சியாக, டேனி செல்டர்ஸ் தனது சி.எஸ்.ஆர்.,பிரிவான சேயோன் அறக்கட்டளை வாயிலாக, 'கானகம் திட்டம்',என்ற பெயரில் விரிவான மரக்கன்றுகள் நடும் இயக்கத்தை துவக்கியுள்ளது. இந்த திட்டத்தின் வாயி லாக, சங்கனுார்பாலம் முதல் துடியலுார் வரை, மேட்டுப்பாளையம் சாலை நடுவே 5,000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. கலெக்டர் பவன்குமார், டேனி ஷெல்டர்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குனர் சிவராமன் கந்தசாமி இணைந்து, திட்டத்தை துவக்கி வைத்தனர். டேனி ஷெல்டர்ஸ் மேலாண்மை இயக்குனர் சிவராமன் கந்தசாமி பேசுகையில், ''கோவையின் பசுமைப் பரப்பை அதிகரித்து, சுற்றுச்சூழல் சமநிலையை மேம்படுத்துவதேதிட்டத்தின் நோக்கம். நகர்ப்புற சூழலில்வளரும் திறன் கொண்ட, உயர்தர மரக்கன்றுகள் நடப்பட்டு, அவை சூற்றுச்சூழலுக்கு பயனளிக்கும் வகையில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார். துடியலுார் முதல் என்.எஸ்.என்.பாளையம் வரை, இந்த திட்டம் சுமங்கலி ஜுவல்லரி நிறுவனத்தினால் செயல்படுத்தப்படுகிறது. ராக் அமைப்பும் கானகம் திட்டத்திற்கு ஒத்துழைப்பை வழங்கியுள்ளது. சுமங்கலி ஜுவல்லரி நிர்வாக இயக்குனர்கள் செந்தில்குமார், அஷ்யந்த் மற்றும் பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி