மேலும் செய்திகள்
எரியூட்டும் மயானம் பயன்பாட்டிற்கு அனுமதி
03-Feb-2025
கோவில்பாளையம்; பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரசு புறம்போக்கு நிலத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதாக, எழுந்த புகார் குறித்து தாசில்தார் நேரில் ஆய்வு செய்தார்.சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம், வெள்ளமடை ஊராட்சிக்குட்பட்ட சாமநாயக்கன்பாளையத்தில், ஆதி திராவிடர்களுக்காக ஒதுக்கப்பட்டது மயான பூமி. இதில், 50 சென்ட் இடத்தை தனியார் நிறுவனத்திற்கு சிலர் தாரை வார்க்க முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது.இது குறித்து சமூக ஆர்வலர் அன்புச்செல்வன், கோவை கலெக்டர் அலுவலகத்திலும், அன்னுார் தாலுகா அலுவலகத்திலும் அளித்த புகார் மனுவில், '50 சென்ட் நிலம் தற்போது இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலானது. மயான பூமியை பாதுகாக்கிறோம் என்று கூறி பாதுகாப்பு சுவரை அரசு நிலம் முழுவதும் கட்டாமல் 50 சென்ட் இடத்தை விட்டு விட்டு கட்டுகின்றனர். அரசு நிலம் பறிபோகாமல் தடுக்க வேண்டும்,' என தெரிவித்துள்ளார்.இதையடுத்து, நேற்று அனனுார் தாசில்தார் யமுனா, வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சாமநாயக்கன் பாளையத்தில், மயானம் மற்றும் அதை ஒட்டியுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் ஆய்வு செய்தனர். அங்கு விசாரணை நடத்தினர்.'அரசு புறம்போக்கு நிலம் பறிபோகாமல் தடுக்க வேண்டும்,' என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.இது குறித்து தாசில்தார் யமுனா கூறுகையில், 'மயானத்தில் ஆக்கிரமிப்பு இல்லை. அங்கு நேரடியாக ஆய்வு செய்யப்பட்டது. எனினும் பொதுமக்களின் புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.
03-Feb-2025