மேலும் செய்திகள்
இணையதள சர்ச்சை: உயர்கல்வி துறை விளக்கம்
29-Jun-2025
கோவை; மத்திய அரசு சார்பில், 'ஒருங்கிணைந்த வேளாண் புள்ளியியல் இணையதளம்' (யு.பி. ஏ.ஜி.,) நிர்வகிக்கப்படுகிறது. இதில், தேசிய அளவிலான வேளாண் புள்ளி விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த இணையதளம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு, கோவை வேளாண் பல்கலையின், வேளாண் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் நடந்தது. இக்கருத்தரங்கில், தரவு களை அடிப்படையாகக் கொண்ட, வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேற்கொள்வது, அதற்கு யு.பி.ஏ.ஜி., இணையதளத்தைப் பயன்படுத்துவது, இத்தளத்தில் உள்ள தரவுக் காட்சிப்படுத்தல், கொள்கை பகுதிகள், முடிவெடுக்கும் கருவிகள் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது. டீன் ரவிராஜ், இயக்குநர் சோனியா சர்மா உட்பட பேராசிரியர்கள், வேளாண் புள்ளியியல் துறைமற்றும் வேளாண் தகவல் தொழில்நுட்பத் துறை மாணவர்கள் பங்கேற்றனர்.
29-Jun-2025