உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பிரச்னைக்கு கிடைக்கவில்லை தீர்வு பொது நல வழக்கு தொடர முடிவு

 பிரச்னைக்கு கிடைக்கவில்லை தீர்வு பொது நல வழக்கு தொடர முடிவு

கோவை: விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக, நிலம் கையகப்படுத்தும் பணிகள், முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில், இங்குள்ள பூங்கா நகர் மற்றும் பிருந்தாவன் நகர் பகுதியில், சுமார் 5,500 சதுர மீட்டர் இடத்தை விமான நிலைய விரிவாக்கத்துக்காக, விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பிரிவு கையகப்படுத்தியுள்ளது. இதில், இங்குள்ள பிரதான சாலை மற்றும் பூங்கா நகரின் பாதாள சாக்கடை, சுத்திகரிப்பு தொட்டி ஆகியவையும் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடு கேட்டு, பூங்கா நகர் பகுதியினர் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த, பூங்கா நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் கூட்டம் நடத்தப்பட்டது. சங்கத் தலைவர் வெள்ளிமலை கூறியதாவது: விமான நிலைய ஓடுதள விரிவாக்கப்பிரிவு மற்றும் மாநகராட்சிக்கு பல முறை எடுத்துரைத்தும், எங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுக்காமல், பிரதான சாலையை தோண்டி, மதில் சுவர் அமைக்க முயற்சி செய்தனர். மக்கள் ஆட்சேபனை தெரிவித்ததால், அந்த ஒரு இடத்தில் மட்டும் வேலை செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். தீர்வு கிடைக்காத பட்சத்தில், பொதுநல வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி