உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒப்பந்த அடிப்படையில் பணியிடம் நிரப்ப முடிவு

ஒப்பந்த அடிப்படையில் பணியிடம் நிரப்ப முடிவு

கோவை: மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்தில் ஒப்பந்த அடிப்படையில் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. உதவியாளர் உடன் இணைந்த அமர்வு எழுத்தர், இளநிலை உதவியாளர் உடன் இணைந்த பதிவேடு எழுத்தர், அலுவலக உதவியாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதிகபட்ச வயது 42. மாத தொகுப்பூதியமாக முறையே ரூ.25 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.13 ஆயிரம் வழங்கப்படும். அமர்வு எழுத்தர் பணிக்கு இளங்கலை பட்டம், பதிவேடு எழுத்தர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி, அலுவலக உதவியாளர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியுள்ளவர்கள் விண்ணப்பத்தை, மாவட்ட நிர்வாக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, புகைப்படத்துடன் வரும் 22 மாலை 5.30 மணிக்குள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி