நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
வால்பாறை; வால்பாறை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அ.தி.மு.க. தெரிவித்துள்ளது. வால்பாறை நகர அ.தி.மு.க. செயலாளர் மயில்கணேஷ் அறிக்கையில், 'வால்பாறை நகரட்சியில் வளர்ச்சிப்பணிகள் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 'இதை கண்டித்தும், அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா படகு இல்லம், பூங்கா திட்டங்களை செயல்படுத்தாமல் முடக்கி வைத்திருப்பதை கண்டித்தும், விரைவில் நகராட்சி அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.