உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாணவராயர் வேளாண் கல்லுாரியில் 320 மாணவர்களுக்கு பட்டம் வழங்கல்

வாணவராயர் வேளாண் கல்லுாரியில் 320 மாணவர்களுக்கு பட்டம் வழங்கல்

பொள்ளாச்சி; வாணவராயர் வேளாண் கல்வி நிறுவனத்தில், இளநிலை வேளாண் பட்ட படிப்பு முடித்த, 320 மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட்டது.பொள்ளாச்சி அருகே, மணக்கடவு வாணவராயர் வேளாண் கல்வி நிறுவனத்தில், 4வது பட்டமளிப்பு விழா நடந்தது. என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். முன்னதாக, சக்தி குழும நிறுவன இயக்குனர் தரணிபதி ராஜ்குமார் வரவேற்றார்.கல்லுாரி முதல்வர் பிரபாகர், கல்வி அறிக்கை சமர்ப்பித்து, நிறுவனத்தின் சாதனைகள் குறித்து விளக்கிப் பேசினார்.சிறப்பு விருந்தினராக, பெங்களூரு இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் துசார்கன்தி பெஹெரா கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டம் மற்றும் பதக்கம் வழங்கினார்.அதன்பின், இலக்கை அடைவதில் கற்றல் மற்றும் படைப்பாற்றலின் முக்கியத்துவம்; இந்தியாவின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு; வளர்ந்து வரும் மக்கள் தொகை மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்கள்; அதிக மதிப்புள்ள பழ மரங்களை அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விளக்கிப் பேசினார்.நிகழ்ச்சியில், இளநிலை வேளாண் பட்ட படிப்பு முடித்த, 320 மாணவ, மாணவியர் பட்டம் பெற்றனர். அதேபோல, கல்லுாரி அளவில், தலா, 5 தங்கம்,வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. முடிவில், வாணவராயர் வேளாண்மைக் கல்வி நிறுவன இயக்குனர் கெம்புசெட்டி நன்றி கூறினார். கல்வி நிறுவன தாளாளர் கற்பகவல்லி, அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை