உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தர்பூசணி விவசாயிகளுக்கு இழப்பீடு தர வலியுறுத்தல்

தர்பூசணி விவசாயிகளுக்கு இழப்பீடு தர வலியுறுத்தல்

- நமது நிருபர் -பாதிக்கப்பட்ட தர்ப்பூசணி விவசாயிகளுக்கு, அரசு இழப்பீடு வழங்க, விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியிருப்பதாவது: உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சதீஷ்குமார், தர்பூசணி பழங்களில் ஊசி செலுத்தி கலப்படம் செய்வதாக தெரிவித்த கருத்துகளால், தர்ப்பூசணி விற்பனை பாதிக்கப்பட்டு, விலையும் கிலோவுக்கு 3 ரூபாய் வரை குறைந்துள்ளது.தர்பூசணி விவசாயி ஒவ்வொருவருக்கும், ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதை வாங்கி விற்கும் வியாபாரிகளும் சிரமப்படுகின்றனர்.போலீசாரால் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க முடியாதநிலையில், கள்ளச்சாராயத்துக்கு பலியானோர் குடும்பங்களுக்கு தமிழக அரசு, தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியது.விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்புக்கு, ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் கணக்கிட்டு, அரசு இழப்பீடு வழங்கவேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை