பாகுபாடின்றி அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க கோரிக்கை
கோவை : தியாகி என்.ஜி.ஆர்.,-எச்.எம்.எஸ்., பொதுத்தொழிலாளர் சங்க பொதுக்குழு கூட்டம், சிங்காநல்லுாரில் உள்ள அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், 2025-27ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள், தேர்வு செய்யப்பட்டனர்.அதன்படி, தலைவராக ராஜாமணி, செயல் தலைவர் பழனிசாமி, பொதுச்செயலாளர் மனோகரன், துணை பொதுச்செயலாளர் காளிமுத்து, பொருளாளர் பழனிசாமி மற்றும் துணை தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்டோர், தேர்வு செய்யப்பட்டனர்.நிறைவில், மத்திய அரசு பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். பயங்கரவாதம் உள்ள இடங்களில் பாதுகாப்பை தீவிரப்படுத்த வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில், பதிவு பெற்ற குழந்தைகளின் கல்விச்செலவு முழுவதையும், வாரியமே ஏற்க வேண்டும்.திருமணத்திற்கு ரூ.1 லட்சமாகவும், பிரசவ உதவித்தொகை ரூ.50 ஆயிரமாகவும், இறுதிச்சடங்கிற்கு ரூ.25 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும்.பாலின பாகுபாடின்றி, 10, 11, 12ம் வகுப்பு பயிலும் அனைவருக்கும்,கல்வி உதவித்தொகை வழங்க அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்து, 60 வயது பூர்த்தியான தொழிலாளர்களுக்கு, ஓய்வூதியம் உரிய நேரத்தில் வழங்கப்படாததால், தொழிலாளர்களின் வாழ்வதாரம் பாதிக்கப்படுகிறது. மாதம்தோறும், 10ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.