மசோதாவை ரத்து செய்ய கோரி த.வெ.க., சார்பில் ஆர்ப்பாட்டம்
வால்பாறை, ; தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில், வால்பாறையில் சூழல் நுண் உணர்வு மசோதாவை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. பழைய பஸ் ஸ்டாண்டில் நடந்த ஆர்பாட்டத்துக்கு, நகர தலைவர் ஆன்ட்ரோஸ் தலைமை வகித்தார்.நகர துணை செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் லோகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் செய்யதுஅலி வரவேற்றார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கீரீஷ் பேசினார்.அதன்பின், தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், கோவை தெற்கு மாவட்ட செயலாளர் விக்னேஷ், கலந்து கொண்டு பேசியதாவது: தமிழகத்தில் இளைய தலைமுறையால் மட்டுமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும். மாற்றுக்கட்சியை சேர்ந்த தலைவர்கள் நிறைய பேர் த.வெ.க., கட்சிக்கு வர துடிக்கிறாங்க.த.வெ.க.,வை பொறுத்த வரை இளைஞர்களுக்கு தான் பதவி. 2026 சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை இடங்களை பிடித்து, ஆட்சி அமைப்போம். இவ்வாறு, பேசினார்.தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. முன்னதாக தி.மு.க., நா.த.க., உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் இணைந்தனர்.கூட்டத்தில், மாவட்ட கழக துணை செயலாளர் அருண்பாண்டியன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் பாலாஜி, நகர மகளிர் அணி பொறுப்பாளர்கள் ஏஞ்சல், அபிதா, ஆனந்தி, மதுபாலா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.