உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பயிர்களில் ஒட்டு கட்ட செயல்விளக்கம்

பயிர்களில் ஒட்டு கட்ட செயல்விளக்கம்

கிணத்துக்கடவு: கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவர்கள், கிணத்துக்கடவு, சொக்கனூர் ஊராட்சியில் கிராம தங்கல் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, சட்டக்கல்புதூர் கிராமத்தில் உள்ள தோட்டத்தில், தக்காளி, கத்தரி போன்ற பயிர்கள் ஒட்டுக்கட்டும் தொழில்நுட்பம் குறித்து, விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர். மேலும், தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பயிர் உற்பத்தி மற்றும் தரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள், தென்னை சாகுபடி மற்றும் தென்னையில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகள், கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ