உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நகராட்சியை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்

நகராட்சியை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகராட்சியை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடக்கிறது, என, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார். பொள்ளாச்சி எம்.எல்.ஏ., ஜெயராமன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்திலேயே எந்த நகராட்சியிலும் இல்லாத வகையில், பொள்ளாச்சி நகராட்சியில் வீட்டு வரி, சொத்து வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது.நகரம் முழுவதும் குப்பை அள்ளாமல் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேட்டு நிலவுகிறது. அ.தி.மு.க. ஆட்சியில், 90 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்ட பாதாள சாசக்கடை திட்டத்தில் ஆட்சி மாறி, நான்கு ஆண்டுகள் கடந்தும், 15 ஆயிரம் இணைப்புகள் இன்னும் கொடுக்கப்படவில்லை. இணைப்புகள் கொடுக்க லஞ்சம் கேட்பது, நகராட்சிக்கு சொந்தமான இடங்களை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சி, வரைபட அனுமதி பெறுவதில் லஞ்சம் பெருகி வருகிறது. மாட்டு சந்தை, காய்கறி மார்க்கெட் சேறும், சகதியுமாக மாறியுள்ளது. கழிப்பிட வசதியின்மை, இடிந்து விழும் நிலையில் உள்ள பஸ் ஸ்டாண்ட் முறையாக பராமரிப்பு இல்லை. தெருவிளக்குகள் பராமரிப்பு இல்லாதது போன்ற பிரச்னைகளுக்கு காரணமான தி.மு.க. அரசு, பொள்ளாச்சி நகராட்சியை கண்டித்து அ.தி.மு.க. சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம், திருவள்ளுவர் திடலில் நாளை (13ம் தேதி) காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி