மாணவர்களுக்கு பற்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு
கோவை; கோவை மண்டல அறிவியல் மையத்தில், மாணவர்களுக்காக மருத்துவ வல்லுநருடன் சந்திப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பற்கள் பாதுகாப்பு, பால் பற்களின் முக்கியத்துவம், கால்சியம் மற்றும் சத்துக்களுடன் கூடிய உணவுகள் குறித்து, மருத்துவ வல்லுநர் விளக்கம் அளித்தார். மண்டல அறிவியல் மைய அதிகாரி அகிலன் கூறுகையில், ''மையத்தின் சார்பில் மாணவர்களுக்காக, அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாளும், 200க்கு மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறுகின்றனர்,'' என்றார்.