பனையை ஊக்குவிக்கும் தோட்டக்கலை துறை
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை சார்பில், பனை விவசாயத்தை ஊக்குவிக்க வகையில், இலவச பனை விதைகள் மற்றும் கன்றுகள் வழங்கப்படுகிறது.பனை மேம்பாட்டு திட்டம் 2024 - 25 திட்டத்தின் கீழ், கிணத்துக்கடவு வட்டாரத்தில் பனை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், முதற்கட்டமாக சிறுகளந்தை ஊராட்சியில் பனை கன்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கோவை தோட்டக்கலை துறை இயக்குனர் சித்தார்த், ஊராட்சி தலைவர் குணசேகரன் மற்றும் கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை அதிகாரிகள் முன்னிலையில், விவசாயிகளுக்கு, 50 பனை விதைகள் மற்றும் 5 பனை கன்றுகள் வழங்கப்பட்டது.கிணத்துக்கடவு வட்டாரத்துக்கு, இரண்டாயிரம் விதைகளும், 30 பனை கன்றுகளும் வழங்கப்பட்டது. இதை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கி சென்றனர்.தற்போது, தோட்டக்கலை துறையிடம், 500 விதைகள் மற்றும் 15 கன்றுகள் உள்ளன. ஒரு நபருக்கு, அதிகபட்சமாக, 5 பனை கன்றுகள் மற்றும் 50 விதைகள் இலவசமாக வழங்கப்படும்.விருப்பம் உள்ளவர்கள், தோட்டக்கலை துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். இதற்கு, சிட்டா, ஆதார் ஜெராக்ஸ், பாஸ்போர்ட் அளவு போட்டோ போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இத்தகவலை, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜமுனாதேவி தெரிவித்தார்.