ரூ.53 லட்சத்தில் மேம்பாட்டு பணி
கோவை : கோவை, வடக்கு சட்டசபைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், ரூ. 53 லட்சம் மதிப்பிலான திட்டங்களை, எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜூனன், பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.வடவள்ளியில் ரூ. 15.70 லட்சம் மதிப்பில் நியாய விலைக்கடை கட்டுவதற்கும், வீர கேரளத்தில், ரூ.12.60 மதிப்பீட்டில் பஸ் ஸ்டாப் கட்டுவதற்கும், பூமி பூஜை நடந்தது. எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜூனன் துவக்கி வைத்தார்.கணபதி அரசு மேல்நிலைப் பள்ளியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மாணவர் கழிப்பிடத்தையும் திறந்து வைத்தார். நிகழ்ச்சிகளில், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.