| ADDED : ஜன 29, 2024 11:07 PM
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் இந்து அறநிலையத்துறையின் கீழ் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் விசேஷ தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வர்.பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், கோவிலை சுற்றி சுற்று மண்டபம், பவானி ஆற்றுக்கு செல்லும் நடைபாதை மண்டபம், கூடுதல் முடி காணிக்கை அறை, பாலுாட்டும் அறை, பவானி ஆற்றில் கூடுதல் படித்துறை, பெண்கள் உடை மாற்றும் அறை என பல்வேறு பணிகள் ரூ.14.50 கோடி மதிப்பில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இதுகுறித்து கோவில் உதவி கமிஷனர் கைலாச மூர்த்தி கூறுகையில், ''வனபத்ரகாளியம்மன் கோவில் மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.பணிகள் தொய்வு இன்றி நடக்க, கூடுதல் வேலை ஆட்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விரைவில் இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும்,'' என்றார்.-