உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வளர்ச்சி பணிகள்; கலெக்டர் ஆய்வு

வளர்ச்சி பணிகள்; கலெக்டர் ஆய்வு

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகளை கோவை கலெக்டர் பவன்குமார் நேற்று ஆய்வு செய்தார். அதில், ஆனைமலை, ஒடையகுளம் பேரூராட்சி பகுதிகளில், குடியிருப்பு பகுதிகளில் இருந்து ஆற்றில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் வகையில், 13.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெறுகின்றன. இப்பணியை பார்வையிட்டு, அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார். வேட்டைக்காரன்புதுார் பேரூராட்சி அண்ணா நகர் பகுதியில் பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது. அங்கு, தலா, 4.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 30 வீடுகள் கட்டும் பணியை பார்வையிட்டார். தாளக்கரை ஊராட்சியில் ஆர்.பொன்னாபுரம் ரோட்டில், 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின் கீழ், சாலையோரங்களில் குடிநீர் குழாய் பொருத்தும் பணிகளை பார்வையிட்டு, பணிகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ள அறிவுரை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ