மேலும் செய்திகள்
டிஎன் ஸ்பார்க் புத்தகங்கள் வந்தாச்சு
1 minutes ago
மாவட்ட செஸ்:380 பேர் பங்கேற்பு
1 minutes ago
ஊர் முதற் பெருக்கம்
2 minutes ago
வி.பி.ஜே. ஜூவல்லர்ஸ் கண்காட்சி இன்று நிறைவு
22 hour(s) ago
நாளைய மின்தடை
22 hour(s) ago
மேட்டுப்பாளையம்:காரமடை ஊராட்சி ஒன்றியத்தில், தோலம்பாளையம், வெள்ளியங்காடு, காளம்பாளையம், கெம்மாரம்பாளையம், மருதுார், தேக்கம்பட்டி, நெல்லித்துறை, ஓடத்துறை, சிக்கதாசம்பாளையம், ஜடையம்பாளையம், பெள்ளேபாளையம், சின்னக்கள்ளிப்பட்டி, முடுதுறை, இரும்பறை, இலுப்பநத்தம், பெள்ளாதி, சிக்காரம்பாளையம் ஆகிய, 17 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் கான்கிரீட் சாலைகள் அமைத்தல், பள்ளி கட்டடங்கள் கட்டுதல், சாக்கடைகள் அமைத்தல், சாலைகள் போடுதல் என, 250க்கு மேற்பட்ட பணிகள் நடைபெறுகின்றன. இதில், சில பணிகள் இன்னும் துவங்கப்படாமல் உள்ளன. ஊராட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து, காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், நேற்று கோவை மாவட்ட கூடுதல் கலெக்டர் சுவெதா சுமன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. முதலில் ஊராட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். அவர்களிடம் ஊராட்சியில், என்னென்ன வளர்ச்சி பணிகள் நடைபெறுகின்றன. மேலும் என்னென்ன பணிகள் நடைபெற வேண்டும், என்பது பற்றிய விவரங்களை, கூடுதல் கலெக்டர் கேட்டறிந்தார். பின்பு காரமடை ஒன்றியத்தில் உள்ள கான்ட்ராக்டர்களின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் சுவெதா சுமன் பேசுகையில், ''ஊராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை, குறிப்பிட்ட காலத்திற்குள் விரைவாக செய்து முடிக்க வேண்டும். இன்னும் பணிகள் துவங்கப்படாமல் இருந்தால், உடனடியாக துவக்கி செய்து முடிக்க வேண்டும். பணிகள் செய்வதில் ஏதேனும் இடையூறுகள் இருந்தால், உடனடியாக அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்து, அதற்கு தீர்வு காண வேண்டும்,'' என்றார். கான்ட்ராக்டர்கள் சார்பில், 'ஒவ்வொரு வேலை செய்யும் போதும், பிடித்தம் செய்யும் டேவணித் தொகை, கான்ட்ராக்டர்களுக்கு பல லட்சம் ரூபாய் திரும்ப வழங்கப்படமால் உள்ளது. எனவே அந்தத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர். இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் பஷீர் அகமது, செயற்பொறியாளர் அருண்குமார், உதவி செயற்பொறியாளர் முனிராஜ், காரமடை பி.டி.ஒ.க்கள் சந்திரா, ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
1 minutes ago
1 minutes ago
2 minutes ago
22 hour(s) ago
22 hour(s) ago