ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் தேவி மஹாத்மிய பாராயண யக்ஞம்
கோவை; ஆடி மாதத்தில் அம்பாளை போற்றிப்பாடும் தேவிமஹாத்மியத்தை, மைதிலி ராமநாதன் குழுவினர், ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில், பாராயணம் செய்தனர். தேவி மகாத்மியம், மார்க்கண்டேய புராணத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இதில் துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரின் மகிமைகள் விளக்கப்பட்டுள்ளன. தேவி மகாத்மியத்தை பாராயணம் செய்வதால், அம்பாளின் அருள் கிடைக்கும். பாவங்களிலிருந்து எளிதில் விடுபடலாம். கோவை மைதிலி ராமநாதன் குழுவினர், நேற்று காலை சாரதாம்பாள் கோவிலில், தேவி மஹாத்மியத்தை பாராயணம் செய்தனர். கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த, தேவாரம்- திருவாசகம் அமைப்பு சார்பில், கோனியம்மன் கோவிலில் லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி, தேவாரம்,திருவாசகம் ஆகியவற்றை ஏராளமான பக்தைகள் பாராயணம் செய்தனர்.