மேலும் செய்திகள்
வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 55 ஆயிரம் பக்தர்கள்
17-Feb-2026
தொண்டாமுத்தூர்: திருச்சி மாவட்டம், லால்குடி, இவெள்ளலூரை சேர்ந்தவர் தேசிங்குராஜன்,60. திருச்சி அரசு போக்குவரத்து கழக மெக்கானிக். இவர் நண்பர்களுடன், பூண்டி வெள்ளியங்கிரி மலை ஏற, நேற்று முன்தினம் மாலை வந்துள்ளார். ஐந்தாவது மலையில் ஒட்டன் சித்தர் சமாதி அருகே மலை ஏறும்போது, தேசிங்குராஜனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். அருகிலிருந்தவர்கள் மீட்டு நேற்று 2:00 மணிக்கு அடிவாரத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு மருத்துவ முகாமில் பரிசோதித்த டாக்டர், தேசிங்குராஜன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். ஆலாந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
17-Feb-2026