மேலும் செய்திகள்
கோவையில் வைகாசி விசாக திருவிழா கோலாகலம்
10-Jun-2025
கோவை; ஆனி மாத பவுர்ணமி நாளான நேற்று குரு பூர்ணிமாவை ஒட்டி நாகசாயி மந்திரில் சிறப்பு வழிபாடு நடந்தது.கோவை சாய்பாபா கோவில் நாகசாயிமந்திரில் குருபூர்ணிமா வைபவம் சிறப்பாக நடந்தது. சாய்பாபாவுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டிருந்தது.தங்கத்தாலான மலர் மாலைகள், நாகலிங்கம் மற்றும் சென்பகப்பூக்கள் மற்றும் சாமந்தி மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். சாய்பாபாவின் ஆசிர்வாதத்தைப் பெற, சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடந்தது.சிறப்பு ஹாரத்தியும், சாய் பஜனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் சாய்பாபா கோவிலுக்கு வருகை தந்து சாய்பாபாவை வழிபட்டனர். சிறப்பு அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.கல்வி அறிவு புகட்டிய குருவை போற்றும் வகையில் குரு வழிபாடு என்ற குரு பூஜையை அனைவரும் மேற்கொள்கின்றனர். இதனை துறவிகள், வியாசபூசை என்றும் வியாச பூர்ணிமா என்றும் அழைக்கின்றனர்.பகவத் கீதையை அருளிய கிருஷ்ணர், வேதங்களை தொகுத்த வியாசர், உபநிடதங்களுக்கு விளக்கம் எழுதிய ஆதி சங்கரர், துவைத வேதாந்த தத்துவத்தை பறைசாற்றிய மத்வாச்சாரியர்,விசிஷ்டாத்வைதத்தை பறைசாற்றிய ராமானுஜர் போன்றவர்களையும் குரு பூர்ணிமா நாளில் வழிபாடு செய்து அருள் பெற்றனர் பக்தர்கள்.
10-Jun-2025