உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆடிப்பூர தேர் விழா பக்தர்கள் பக்தி பரவசம்

ஆடிப்பூர தேர் விழா பக்தர்கள் பக்தி பரவசம்

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே சாமநாயக்கன்பாளையத்தில் உள்ள ஆண்டாள் திருநாச்சியார் சமேத ரங்க மன்னார் திருக்கோவிலில் ஆடிப்பூர திருத்தேர் உலா நிகழ்ச்சி நடந்தது. பெரியநாயக்கன்பாளையம் அருகே வெள்ளமடை ஊராட்சிக்கு உட்பட்ட சாமநாயக்கன்பாளையத்தில் ஆண்டாள் திருநாச்சியார் சமேத ஸ்ரீ ரங்க மன்னார் திருக்கோவில் உள்ளது. இங்கு ஆடிப்பூர திருத்தேர் விழா நடந்தது. விழாவையொட்டி, காலை, 6:00 மணிக்கு திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை பாராயணம் நடந்தது. காலை,10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், மதியம், 1:00 மணிக்கு அன்னதானம், 2:00 மணிக்கு திருத்தேர் உலா நடந்தது. மாலை, 4:30 மணிக்கு ஆண்டாள் ஸ்ரீ ரங்க மன்னார் திருமஞ்சனம், மாலை, 5:30 மணிக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆடி மாதம், 13ம் நாளையொட்டி நேற்று செவ்வாய்க்கிழமை காலை, 10:00 மணிக்கு சுதர்சன திருமஞ்சனம், 11:00 மணிக்கு கொடி இறக்குதல், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !