உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அணணாதிடலில் ஸ்டேடியம் அமைக்க பக்தர்கள் கோரிக்கை

அணணாதிடலில் ஸ்டேடியம் அமைக்க பக்தர்கள் கோரிக்கை

வால்பாறை: வால்பாறையில், கோவில் விழாக்கள் நடத்த வசதியாக, அண்ணாதிடலில் ஏற்கனவே உள்ளபடி ஸ்டேடியம் அமைக்க வேண்டும், என, பக்தர்கள் சார்பில் கமிஷனரிடம் மனு வழங்கப்பட்டது. வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் அருகில் அண்ணாதிடல் அமைந்துள்ளது. கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா, ஐயப்ப சுவாமி கோவில் மண்டல பூஜை திருவிழா, தைப்பூசத்திருவிழா உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோவிலில் நடக்கும் விழாவின் போது, இங்குள்ள கலையரங்கில் தான், கோவில் விழா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் நடக்கிறது. தற்போது அண்ணாதிடல் அப்புறப்படுத்தப்பட்டு, நகராட்சி சார்பில் கார் பார்க்கிங் அமைக்கும் பணி நடக்கிறது. ஆனால் இது வரை அந்த இடத்தில் ஸ்டேடியம் கட்டப்படவில்லை. இதனையடுத்து, வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் பக்தர்கள், நகராட்சி கமிஷனரை சந்தித்து, அண்ணாதிடலில் கோவில் விழாக்கள் நடத்த வசதியாக கலையரங்கம் (ஸ்டேடியம்) கட்ட வேண்டும், என, மனு வழங்கி வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி