உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கூடுதல் பஸ் இயக்காததால் பக்தர்கள் அவதி

கூடுதல் பஸ் இயக்காததால் பக்தர்கள் அவதி

அன்னூர்: 'மருதமலைக்கு கூடுதல் பஸ்கள் இயக்காததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்,' என பா.ஜ., புகார் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாரதிய ஜனதா அறிவு சார்பிரிவு மாநில செயலாளர் ஜெயபால் வெளியிட்டுள்ள அறிக்கை : முருகப்பெருமானின் ஏழாவது படை வீடாக மருதமலை கருதப்படுகிறது. கந்த சஷ்டி விழாவில் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டு காந்திபுரம் மற்றும் உக்கடத்திலிருந்து மிகக் குறைவான பஸ்களே மருதமலைக்கு இயக்கப்பட்டன. இதனால் அன்னூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட புறநகர் பகுதியில் இருந்து காந்திபுரம் மற்றும் உக்கடம் வந்த பக்தர்கள் மருதமலை செல்ல முடியாமல் தவிப்புக்கு உள்ளாகினர். தனியார் கார் உள்ளிட்ட அதிக கட்டணம் செலுத்த வேண்டி வாகனங்களை பயன்படுத்தி மருதமலைக்கு சென்றனர். போதுமான பஸ்கள் இல்லாததால் மணிக்கணக்கில் பக்தர்கள் காத்திருந்தனர். இது பக்தர்களை வேதனைக்கு உள்ளாக்கியது. இனிவரும் காலங்களிலும், 28ம் தேதி (இன்று) திருக்கல்யாணத்தின் போதும் மருதமலைக்கு கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை