உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 38,816 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்

38,816 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்

மேட்டுப்பாளையம்; தேசிய குடற்புழு நீக்க முகாம் காரமடை வட்டாரத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள், தனியார் பள்ளிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லுரிகள் என 200க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்தன. இதில் அல்பெண்டாசோல் எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரை இலவசமாக வழங்கப்பட்டது.இதுகுறித்து காரமடை வட்டார சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தேசிய குடற்புழு நீக்க முகாமில் காரமடை வட்டாரத்தில், 1 முதல் 19 வயதுக்குட்பட்ட சுமார் 38,816 குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.விடுபட்ட குழந்தைகள், மாணவர்களுக்கு வரும் 17ம் தேதி வழங்கப்பட உள்ளன, என்றார்.---மேட்டுப்பாளையம், பிப். 14-- மேட்டுப்பாளையம் எஸ்.எஸ்.வி.எம்., விதான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 11ம் ஆண்டு விழா நடந்தது.விழாவுக்கு எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மணிமேகலை மோகன் தலைமை வகித்தார். செயலர் மோகன்தாஸ் முன்னிலை வகித்தார்.நிர்வாக இயக்குனர் ஸ்ரீஷா நிதின் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். 12-ம் வகுப்பு மாணவி பிரியோனா வரவேற்றார். பள்ளியில், 10 மற்றும், 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், மத்திய அரசு வருமான வரித்துறை கமிஷனர் நந்தகுமார், கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசுகையில்,' ஒருவர் வாழ்வில் கல்வியும், திட்டமிடலும், கடின உழைப்புடன் கூடிய கவனம் சரியாக அமைந்தால், யாரும் அடைய முடியாத ஒரு லட்சியத்தினை அடைய முடியும்' என்றார்.விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 11ம் வகுப்பு மாணவி லக்சிகா ஜாஸ்மின் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை