உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சர்க்கரை நோயும் பாத பராமரிப்பும்

சர்க்கரை நோயும் பாத பராமரிப்பும்

'சர்க்கரை பாதிப்பு இருந்தால், கால்களை கூடுதல் கவனத்துடன் பராமரிப்பது மிகவும் முக்கியம்,' என்கிறார், கோயம்புத்துார் மெடிக்கல் சென்டர் மருத்துவமனை சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் சிவஞானம்.அவர் கூறியதாவது:பாதங்களில் ஏதாவது வெட்டுக்கள், கொப்புளங்கள், வீக்கம் அல்லது சிவந்து இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை மற்றும் ஆலோசனை பெற வேண்டும். கால்களை வெதுவெதுப்பான நீர் மற்றும் லேசான சோப்புடன் கழுவ வேண்டும். விரல்களுக்கு இடையில் நன்றாக தேய்த்து உலர வைக்க வேண்டும்.வறட்சி மற்றும் வெடிப்பு ஏற்படுவதை தடுக்க சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டும். ஆனால், கால்விரல்களுக்கு இடையில் ஈரப்பதம் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், அது பூஞ்சை தொற்றுக்கு வழி வகுக்கும்.காலணிகளை இறுக்கமாக அணியக்கூடாது. சவுகரியமாக இருக்கும் வகையிலான காலணிகளையும், ஈரப்பதத்தை உறிஞ்சக்கூடிய சாக்ஸ்களையும் பயன்படுத்த வேண்டும். காயங்கள், தொற்று நோய்களை தடுக்க, வெறுங்காலுடன் வெளியில் செல்லக்கூடாது.நரம்பு பாதிப்பு, பாதங்களை பாதிக்கும் மோசமான சுழற்றியை தடுக்க ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். சர்க்கரை நோய் பாத பராமரிப்பில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவரிடம் வழக்கமான கால் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளோர், பாதத்தை அதிக கவனத்துடன் பராமரிக்க வேண்டும். சரியாக கவனிக்காமல் விட்டால், பாதிப்பு தீவிரமடைந்து, ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. சர்க்கரையால் ஏற்படும் இருதய நோய், சிறுநீரக பாதிப்பு, நரம்பு மற்றும் கண் பாதிப்பு பிரச்னைகள் குறித்தும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.ரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிக்கவும், ஆரோக்கியமான உணவு உட்கொள்ள வேண்டும். நடை பயிற்சியும் மேற்கொள்வது அவசியம்; மருத்துவரின் பரிந்துரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.மேலும் விவரங்கள் மற்றும் முன்பதிவுக்கு, 87548 87568 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை