மேலும் செய்திகள்
12 எஸ்.ஐ., க்களுக்கு பதவி உயர்வு
4 minutes ago
ஸ்ரீ சத்யசாய்பாபா பிறந்தநாள் விழா
4 minutes ago
சுகாதார செயல்பாடு : பள்ளிகளில் ஆய்வு
5 minutes ago
இன்றைய நிகழ்ச்சி
5 minutes ago
மேட்டுப்பாளையம்: தினமலர் பட்டம் வாயிலாக, மாணவர்கள் கணிதம் மற்றும் அறிவியலில் உள்ள பொது அறிவை அறிந்து கொள்ள முடிகிறது, என, தலைமை ஆசிரியை பேபி எஸ்தர் கூறினார். மேட்டுப்பாளையத்தில் பழைய சந்தை கடை அருகே, வள்ளுவர் நகரவைத் துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், 330 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில், அனைத்து வகுப்பறைகளும் ஸ்மார்ட் வகுப்பாக மாற்றப்பட்டுள்ளது. இப்பள்ளியில் நன்கொடையாளர்கள் வாயிலாக நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் ஒரு வகுப்பினர் அரை மணி நேரம் கட்டாயம் நூலகத்திற்கு சென்று படிக்கின்றனர். இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை பேபி எஸ்தர் கூறியதாவது: ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், மாணவர்களுக்கு நூலகத்தில் இருந்து, வீட்டுக்கு ஒரு புத்தகம் கொடுத்து வருகிறோம். சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாளில் புத்தகத்தை படித்து, அதில் முக்கிய தகவல்களை, நோட்டில் எழுதி வரும்படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 'தினமலர்-பட்டம்' பேப்பர் இப்பள்ளிக்கு வாங்கப்பட்டுள்ளது. இந்த பேப்பரை தினமும் சுழற்சி முறையில் மூன்று, நான்கு, ஐந்து ஆகிய வகுப்பு மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் கணிதம், அறிவியல் பாடம் குறித்த, பொது அறிவு கேள்வி பதில்கள், அதிக அளவில் உள்ளன. அந்த பேப்பரை படிக்கும் மாணவர்களிடம், முக்கிய பொது அறிவு கேள்வி பதில்களை குறித்து வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் முக்கியமான தகவல்களை நோட்டில் எழுதி வருகின்றனர். 'தினமலர்-பட்டம்' மாணவர்களுக்கு பொது அறிவை வளர்க்கும் வகையில் உள்ளது. இவ்வாறு தலைமை ஆசிரியை கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சமூக ஆர்வலர் ஜெயராமன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
4 minutes ago
4 minutes ago
5 minutes ago
5 minutes ago