கோவை: 'தினமலர் பட்டம்' 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி- வினா நிகழ்ச்சியில் பங்கேற்ற, சின்னமேட்டுப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, வட்டமலைபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் சுப்பிரமணியம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மாணவ - மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி, அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்', இந்துஸ்தான் கல்விக் குழுமம் மற்றும் கோவை மாநகராட்சி இணைந்து, மாநகராட்சி பள்ளி மாணவர்களிடம், கற்றல் சார்ந்து சிந்தனை திறன், பாடப்பகுதிகளில் உள்ளார்ந்த புரிதலை வளர்த்து, படிப்பின் மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கவும் மற்றும் பொது அறிவு திறன்களை மேம்படுத்த இது போன்ற வினாடி - வினா நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன்படி, சின்னமேட்டுப்பாளையம், வட்டமலைபாளையம் மற்றும் சுப்பிரமணியம்பாளையம் ஆகிய பகுதிகளில் செயல்படும் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகளில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. சின்னமேட்டுப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இப்பள்ளியில் நடைபெற்ற முதற் சுற்று எழுத்து தேர்வில் 80 மாணவ-மாணவியர் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள், எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதி போட்டியில் பங்கேற்றனர். 'எப்' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி யகாஷ்வினி மற்றும் ஏழாம் வகுப்பு மாணவன் கோகுல் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு கேடயம், சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. இவர்களுடன், 'பி' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவன் ஷயந்த் கரன் மற்றும் ஏழாம் வகுப்பு மாணவன் கவுதம் குமார் வர்மா; 'எச்' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர்கள் வெண்பா மற்றும் யோகேஷ்; 'ஏ' அணியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவன் சாய்ராம் சாஹூ மற்றும் எட்டாம் வகுப்பு மாணவன் ராதாகிருஷ்ணன்; 'சி' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர்கள் நவி ஜோவாப் மற்றும் திவாகர் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். அவர்களுக்கு, பள்ளி தலைமையாசிரியை (பொறுப்பு) மல்லிகா பரிசு கள் வழங்கினார். வட் டமலை பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இப்பள்ளியில் நடைபெற்ற முதற் சுற்று எழுத்து தேர்வில், 50 மாணவ-மாணவியர் பங்கேற்றனர். இவர்களில் அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள், எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதி போட்டியில் பங்கேற்றனர். 'டி' அணியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி தன்யா ஸ்ரீ மற்றும் எட்டாம் வகுப்பு மாணவி லிகிதா ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு கேடயம், சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. இவர்களுடன், 'இ' அணியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவன் விஷ்ணு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவி வைஷ்ணவி; 'ஜி' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி ரித்திகா மற்றும் ஏழாம் வகுப்பு மாணவி மகாலட்சுமி; 'ஏ' அணியை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவி நேஹா ஸ்ரீ மற்றும் எட்டம் வகுப்பு மாணவன் முனீஸ்வரன்; 'பி' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி மகாபூரணி மற்றும் ஆறாம் வகுப்பு மாணவி அனுஸ்ரீ ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். இவர்களுக்கு, தலைமையாசிரியை (பொறுப்பு) வனிதா குமாரி பரிசுகள் வழங்கினார். சுப்பிரமணியம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இப்பள்ளியில் நடைபெற்ற முதற் சுற்று எழுத்து தேர்வில், 50 மாணவ-மாணவியர் பங்கேற்றனர். இவர்களில் அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள், எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதி போட்டியில் பங்கேற்றனர். 'எச்' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர்கள் நரேந்திரன் மற்றும் விஸ்வா ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு கேடயம், சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. இவர்களுடன், 'சி' அணியை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவிகள் அம்பிகா மற்றும் மதினிஷா; 'டி' அணியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவிகள் நிபந்தனா மற்றும் ஹேவண்யா 'இ' அணியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவிகள் தேசிகா மற்றும் பிரேமா; 'ஏ' அணியை சேர்ந்த மாணவர்கள் ராகுல் மற்றும் ரோஹித் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். இவர்களுக்கு, தலைமையாசிரியை ராதாமணி பரிசுகள் வழங்கினார்.