உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தினமலர் -- பட்டம் வினாடி - வினா போட்டியில் அபாரம்

தினமலர் -- பட்டம் வினாடி - வினா போட்டியில் அபாரம்

கிணத்துக்கடவு: 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான, 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற, வினாடி - வினா போட்டி கிணத்துக்கடவு, விவேக் வித்யா மந்திர் சி.பி.எஸ்.சி., பள்ளியில் நடந்தது.பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வுத்திறன், கணிதம், மொழித்திறனை ஊக்குவிக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு, 'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை, 'பட்டம்' இதழ் தினமும் பள்ளிகளில் கிடைக்கும்.இதை வாசிக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்தவும், அவர்களின் கற்றல் சார்ந்த தேடலை விரிவுப்படுத்தும் வகையிலும், 2018 முதல், 'மெகா வினாடி - வினா' போட்டி நடத்தப்படுகிறது.நடப்பாண்டுக்கான வினாடி - வினா போட்டி, 'பட்டம்' இதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், கிணத்துக்கடவு, விவேக் வித்யா மந்திர் சி.பி.எஸ்.சி., பள்ளியில் நடந்தது. எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனமும் கரம் கோர்த்துள்ளது. 'கோ - ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜென்சி உள்ளது.பள்ளியில் நடந்த வினாடி - வினா போட்டியில், 268 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், அதிக புள்ளிகள் பெற்ற, 16 பேர் தேர்வு செய்யப்பட்டு, எட்டு அணிகளாக பிரித்து இறுதிச்சுற்று போட்டி நடந்தது.மூன்று கட்டங்களாக நடந்த இப்போட்டியில், முதல் பரிசை, 'சி' அணியை சேர்ந்த, ஒன்பதாம் வகுப்பு மாணவி சன்மதி மற்றும் எட்டாம் வகுப்பை சேர்ந்த மித்ரா ஆகியோர் வென்றனர்.போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியரை முதல்வர் கீதா, ஆசிரியர் நித்தியா மற்றும் ஒருங்கிணைப்பாளர் முத்துராஜா ஆகியோர் பாராட்டி, சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். முதலிடம் பிடிக்கும் மாணவர்கள், அரையிறுதியில் பங்கேற்பர். இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு இறுதி போட்டி நடத்தப்படும்.

வாசிப்பு அதிகரிப்பு!

பள்ளி முதல்வர் கீதா கூறுகையில், 'பட்டம்' இதழில் பொது அறிவு மட்டுமின்றி, பாடம் சார்ந்த தகவல்களும் அதிகம் உள்ளன. 'பட்டம்' இதழ் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை 'பட்டம்' இதழ் ஏற்படுத்தியுள்ளது. அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற நல்ல இதழாக உள்ளது, என்றார்.

பாடத்துக்கு கைகொடுக்கும் 'பட்டம்'

மாணவி சன்மதி: 'பட்டம்' இதழில், இயற்பியல் சார்ந்த தகவல் இடம் பெறுவதால் இயற்பியல் பாடம் படிக்க எளிமையாக உள்ளது. பிற கலாசாரத்தை பற்றி தெரிந்து கொள்ள உதவியாக இருக்கிறது. தேதி சொல்லும் சேதி என்ற பகுதியில் வரும் தகவல்கள் அனைத்தும் படிக்க ஆர்வமாக இருப்பதால் அனைவரும் கட்டாயம் பட்டத்தை 'மிஸ்' செய்வதில்லை. பாடம் மட்டும் படிக்காமல் பட்டதையும் படிப்பதால் கூடுதல் தகவல்கள் தெரிந்து கொள்ளமுடிகிறது.மாணவி மித்ரா: 'பட்டம்' இதழ் மாணவர்களுக்கு எளிமையக புரியும் வகையில் உள்ளது. இதில், உலகம் சார்ந்த தகவல்கள், விலங்கினங்கள் குறித்த விரிவான தகவல்கள் மற்றும் தமிழ், ஆங்கிலம் போன்றவைகளின் இலக்கணங்கள் சார்ந்த தகவல்களும் இடம்பெற்றிருப்பதால் இதை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. பட்டம் இதழை தொடர்ந்து படிக்கும் போது, வாசிப்பு பழக்கமும் அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ