உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தினமலர் மார்கழி விழாக்கோலம் கோலாகலம்! வசீகரித்தன வண்ண, வண்ண கோலங்கள்

தினமலர் மார்கழி விழாக்கோலம் கோலாகலம்! வசீகரித்தன வண்ண, வண்ண கோலங்கள்

கோவை; தடாகம் ரோடு, இடையர்பாளையத்தில், 'தினமலர்' 'மார்கழி விழா கோலம்' போட்டியில், வண்ண, வண்ண கோலங்களிட்டு நம் வாசகியர் துாள் கிளப்பினர்.கோவையில்,தினமலர் மற்றும் தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை இணைந்து, 'மார்கழி விழா கோலம்' கோலப்போட்டி நடத்தி வருகிறது.இதில், கோவையில் உள்ள பல்வேறு அப்பார்ட்மென்ட்களில் வசிக்கும் பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று, ரங்கோலி, புள்ளி கோலங்களை வண்ணமயமாக வரைந்து, பரிசுகளை பெற்று செல்கின்றனர்.கோவை தடாகம் ரோடு, இடையர்பாளையத்தில் உள்ள ஸ்ரீவத்ஷா பிளாட்டினம் அப்பார்ட்மென்டில் நேற்று கோலப்போட்டி நடந்தது. இதில், 25க்கும் மேற்பட்ட பெண்கள் ரங்கோலி மற்றும் புள்ளிக்கோலங்களை போட்டு அசத்தினர். பலரும் ரங்கோலி கோலங்களை தேர்வு செய்து, வண்ண, வண்ணமாக கோலங்களிட்டு அசத்தினர்.இதில், உலகில் அமைதியை போதிக்கும் புத்தர், ரங்கோலி கோலம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.இதேபோல, சிவலிங்கத்திற்கு, 'ஓம்' என்ற பிரணவ மந்திரத்துடன் பெண் ஒருவர் அபிஷேகம் செய்யும் காட்சி ரங்கோலி கோலமாக தத்ரூபமாக போடப்பட்டிருந்தது. பெண் ஒருவர் வீட்டின் முன்பு கையில் விளக்கு ஏந்தியபடி செல்லும் ரங்கோலி ஓவியம் சிறப்பாக இடப்பட்டிருந்தது.இதேபோல பச்சை கிளி ஒன்று மலர்களிடையே அமர்ந்து இருப்பது போன்ற கோலமும் சிறப்பாக இருந்தது. ரங்கோலி கோலத்துக்கு நடுவில் செயற்கை விளக்கு வைத்து இடப்பட்ட கோலம் பார்வையாளர்களை, பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.நிகழ்ச்சியில், 77 வயதான வாசுகி அம்மாள், மாவிலை கோலம் வரைந்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். நிகழ்ச்சியில், புள்ளிக்கோலமிட்ட மாலினி, லட்சுமி, மீனு ஆகியோரும், ரங்கோலி கோலமிட்ட ரேகா, சுபாஷினி, அர்ச்சனா ஆகியோரும் பரிசு பெற்றனர்.சிறப்பு பரிசுகள், வாசுகி அம்மாள், மாயா, லாவன்யா, அபிநயா, கவிதா, சிந்து ஆகியோருக்கு வழங்கப்பட்டன.இந்த 'மார்கழி விழா கோலம்' போட்டியை, அல்ட்ரா மேடு பெர்பெக்ட்லி மற்றும் ஸ்ரீ பேபி பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்தினர் இணைந்து வழங்கினர். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஸ்ரீ வத்ஷா பிளாட்டினம் அபார்ட்மென்ட் குடியிருப்போர் நல சங்க தலைவர் நிறைமதி, செயலாளர் ராமச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் கவிதா ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ