| ADDED : டிச 12, 2025 05:23 AM
உ ண்மையின் உரை கல்லாக விளங்கும், பவள விழா காணும் தினமலர் நாளிதழ் துவங்கப்பட்டதில் இருந்தே, வாசகனாக இருப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். எனக்கு தற்போது, 91 வயதாகிறது. தற்போதும் விடாமல் தினமலரை படித்து வருகிறேன். எந்த பிரச்னை என்றாலும் விரிவான தகவல்களை தருவதுடன், தீர்வையும் கூறுவது தினமலரின் சிறப்பு. தினமலர் நாளிதழ் ஒரு பொது அறிவு பொக்கிஷம். குறிப்பாக சிறுவர், சிறுமியர் மற்றும் இளைய தலைமுறைக்கு நல்ல வழிகாட்டியாக உள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு பெற துணை நிற்கிறது. ஆன்மிக மலர் பக்தர்களை ஆட்சி செய்கிறது. சிறுவர் மலர் குழந்தைகளை ஈர்க்கிறது. வாரமலர் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து இழுக்கிறது. புத்தகங்களை நான் படிப்பதோடு மட்டுமல்லாது, குழந்தைகளுக்கும் வழங்குவேன். அதில் வரும் போட்டிகளை, குழந்தைகளுக்குள் நடத்தி பரிசு வழங்குவேன். ஆன்மிக மலரை, ஆன்மிக நண்பர்களுக்கு கொடுப்பேன். தினமலர் நாளிதழ் நடத்திய போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. பலரையும் போட்டிகளில் பங்கேற்க செய்து, பரிசு வெல்ல வழிகாட்டியும் உள்ளேன். ஆன்றோர்கள், சான்றோர்கள், விஞ்ஞானிகள், அரசியல் கட்சி தலைவர்கள் கூறிய கருத்துக்கள், இணைப்பு புத்தகங்களில் வரும். அவற்றை சேகரித்து, என்னுடைய விசிட்டிங் கார்டில் எழுதி, என்னை பார்க்க வருவோருக்கு வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளேன். பல வாசகர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் தினமலர் நாளிதழுக்கு, எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். ரா.சீனிவாசன் சித்தநாயக்கன்பாளையம்ரா.சீனிவாசன்