தினமலர்-பட்டம் மெகா வினாடி-வினா போட்டி: உடனுக்குடன் பதிலளித்து மாணவர்கள் அசத்தல்
கோவை; 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் நேற்று நடந்த 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற வினாடி-வினா போட்டியில் மாணவ, மாணவியர் உடனுக்குடன் பதிலளித்து அரையிறுதிக்கு முன்னேறினர்.இந்தாண்டுக்கான 'வினாடி--வினா விருது, 2024-25' போட்டி, 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் கடந்த மாதம், 8ம் தேதி துவங்கியது. இவர்களுடன் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனமும் கரம் கோர்த்துள்ளது.'கோ-ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜென்சிஸ் உள்ளது. நேற்று, வெள்ளானப்பட்டி, பெரியநாயகி அம்மன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த வினாடி-வினா நிகழ்ச்சியில்,420 பேர் தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு எழுதினர். மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், 'ஏ' அணியை சேர்ந்த, 9ம் வகுப்பு மாணவர் சாய் சஞ்சீவ், எட்டாம் வகுப்பு மாணவர் பிரிஜேஸ் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி தாளாளர் மோகன்ராஜ், துணை முதல்வர் விஜயகுமார் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். வினாடி-வினா ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீஜா, நந்தினி தேவி, சுகன்யா ஆகியோர் உடனிருந்தனர்.அதேபோல், சரவணம்பட்டி, விவேகம் சீனியர் செகண்டரி பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், 30 பேர் தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு எழுதினர். இதில், மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், 'எச்' அணியை சேர்ந்த, 9ம் வகுப்பு மாணவர்கள் திவ்யன் அனிஸ் சிவராஜ், திவாகர் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு, துணை முதல்வர் வினிடா கிறிஸ்டினா பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சிலம்பரசன், ஆசிரியர் ரேவதி வர்மா ஆகியோர் உடனிருந்தனர். மாநகராட்சி நடுநிலைப்பள்ளி
'தினமலர்' மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் சார்பில் மாநகராட்சி பள்ளிகளிலும் 'வினாடி-வினா விருது, 2024-25' போட்டி நடத்தப்பட்டு வருகிறது.' தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழானது, கோவை மாநகராட்சி மற்றும் இந்துஸ்தான் கல்வி குழுமத்துடன் இணைந்து இப்போட்டியை நடத்துகிறது. நேற்று, போத்தனுார் அருகே கணேசபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்த வினாடி-வினா நிகழ்ச்சியில், தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வை, 106 பேர் எழுதினர். இதில், மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், 'எச்' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி சுபஸ்ரீ, ஆறாம் வகுப்பு மாணவி சுபாஷினி ஆகியோர் முதலிடம் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் நாகராஜ் பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அசினா பேகம், ஜெயஸ்வேதா, சந்தானலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.