உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் தடுக்க கிருமி நாசினி தெளிப்பு

ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் தடுக்க கிருமி நாசினி தெளிப்பு

மேட்டுப்பாளையம்: ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் எதிரொலியாக கோவை-கேரள சோதனை சாவடிகள் அலர்ட் செய்யப்பட்டு அங்கு வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் எதிரொலியாக கோவை-கேரளா எல்லையில் உள்ள முள்ளி, கோபனாரி உள்ளிட்ட 12 சோதனை சாவடிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கால்நடை துறையின் கோவை மண்டல இணை இயக்குனர் மகாலிங்கம் கூறியதாவது:- சோதனை சாவடிகளில் பன்றிகள், உணவு கழிவுகள், பண்ணை தீவனங்கள் உள்ளிட்டவை ஏற்றிக்கொண்டு வரும் வாகனங்கள், அனுமதிக்கப்படுவது இல்லை. இதர வாகனங்கள் கிருமி நாசினி தெளித்த பின் செல்ல அனுமதிக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள பன்றி பண்ணைகளில் 2,200 பன்றிகள் பராமரிக்கப்படுகிறது. அனைத்து பன்றிகளுக்கும் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டுள்ளது. பண்ணைகளில் உள்ள பன்றிகள், திடீரென தீவனம் கொள்ளாமல், காய்ச்சல், சோர்வு, தோல் அரிப்பு, இறப்பு, இறப்புக்கு பின் ரத்த கசிவு ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு தெரியப்படுத்த வேண்டும். கோவை மாவட்டத்தில் இதுவரை ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் கண்டறியப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை