உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரேஷன் கடைகளில் அறிவிப்பு அவசியம்; காத்திருந்து திரும்புவதால் அதிருப்தி

ரேஷன் கடைகளில் அறிவிப்பு அவசியம்; காத்திருந்து திரும்புவதால் அதிருப்தி

பொள்ளாச்சி, ;ரேஷன் கடைகளில், விடுமுறை,பணியாளர் விடுப்பு, மாற்றுப்பணி குறித்த விபரத்தை முறையாக அறிவிப்பு பலகையில் எழுதி வைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.பொள்ளாச்சி தாலுகாவில், 147 ரேஷன் கடைகள் உள்ள நிலையில், 1.33 லட்சம் கார்டுதாரர்கள் உள்ளனர். ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி மற்றும் குறைந்த விலையில் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வினியோகிக்கப்படுகிறது.இந்நிலையில், சில கடைகளில், பணியாளர்கள் விடுப்பு மற்றும் மாற்றுப் பணிக்கு விடுவிக்கப்படுகின்றனர். அப்போது, கடையின் முகப்பு பகுதியில் உள்ள அறிவிப்பு பலகையில், அந்த விபரம் எழுதப்படுகிறது.கார்டுதாரர்கள், கடைக்கு சென்றாலும் கடை பூட்டி இருப்பதை கண்டறிந்தாலும், அறிவிப்பு பலகையில் இடம்பெற்றுள்ள விபரத்தை அறிந்து திரும்புகின்றனர். அதற்கேற்ப வேறொரு நாளில் கடைக்கு சென்று பொருட்கள் வாங்க முற்படுகின்றனர்.ஆனால், சில கடைகளில் உள்ள பணியாளர்கள், இத்தகைய விபரத்தை முறையாக எழுதுவது கிடையாது. இருப்பு பொருட்களுக்கு ஏற்ப காலம் தாழ்ந்து கடை திறப்பதாகவும் புகார் எழுகிறது. எந்த விபரமும் அறியாத கார்டுதாரர்கள், நீண்ட நேரம் காத்திருந்து பரிதவிக்கின்றனர்.மக்கள் கூறியதாவது:ரேஷன் கடைகளில், வழங்கப்படும் பொருட்களின் விலைப்பட்டியல் மற்றும் கையிருப்பு பொருட்கள் விபரத்தை அறிவிப்பு பலகையில் தினமும் அப்டேட் செய்ய வேண்டும். மேலும், அரசு விடுமுறை, பணியாளர் விடுப்பு, மாற்றுப்பணி குறித்த விபரத்தையும் குறிப்பிட வேண்டும். அப்போது, ரேஷன் கடைக்கு வரும் கார்டுதாரர்கள், காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்புவது தவிர்க்கப்படும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை