குடியிருப்பு பகுதியில் ரோடு சீரமைக்காததால் அதிருப்தி
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, அண்ணா நகர் பகுதியில் தார் ரோட்டை சீரமைக்காததால், மக்கள் அவதிப்படுகின்றனர்.கிணத்துக்கடவு, அண்ணா நகர் பகுதியில் முதல் மற்றும் இரண்டாவது தெருவில் தார் ரோடு ஆங்காங்கே சேதமடைந்து காணப்பட்டது. இதனால், வாகனம் ஓட்டுனர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.இதைத் தொடர்ந்து, பேரூராட்சி நிர்வாகம் சார்பில், நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில், 46 லட்சம் மதிப்பீட்டில், அண்ணா நகர் முதல் மற்றும் இரண்டாவது தெருவில், தார் ரோடு சீரமைப்பு பணிகள் நடந்தது.ஆனால், சீரமைப்பு செய்யப்பட்ட ரோடு குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில் இருப்பதால், வீட்டினுள் உள்ள வாகனங்களை வெளியே எடுக்கும் போது பெரும் சிரமம் ஏற்படுகிறது. சில இடங்களில் வீட்டின் கதவுகள் திறக்க முடியாத அளவுக்கு ரோடு அமைக்கப்பட்டு உள்ளது.இதனால், அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். சிலர் குடியிருப்பு கேட் அருகே போடப்பட்ட ரோட்டை இடித்து அப்புறப்படுத்தினர். அப்பகுதி மக்கள் நலன் கருதி, இடையூறாக உள்ள ரோட்டை முறையாக மறுசீரமைப்பு செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.