உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோட்டில் குடிநீர் வீணாவதால் அதிருப்தி

ரோட்டில் குடிநீர் வீணாவதால் அதிருப்தி

நெகமம், ; பொள்ளாச்சி -- பல்லடம் ரோடு, தொப்பம்பட்டி அருகே ரோட்டின் ஓரத்தில் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர்.பொள்ளாச்சி --- பல்லடம் ரோட்டில், வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. இதில், தொப்பம்பட்டி பகுதியில் ரோட்டின் ஓரத்தில் குழாயில் கசிவு ஏற்பட்டு, கடந்த இரண்டு நாட்களாக தண்ணீர் ரோட்டில் வழிந்தோடுகிறது.இதனால், அவ்வழியில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர். குடிநீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில், ரோட்டில் குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.மேலும், குடிநீர் வீணாவதை தடுக்க, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !