தீபாவளிக்கு புத்தாடை வினியோகம்
போத்தனூர்: மலுமிச்சம்பட்டியில் நாகசக்தி அம்மன் சமூக ஆன்மிக அறக்கட்டளை செயல்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு, அறக்கட்டளை நிறுவனர் விஸ்வகர்மா ஜெகத்குரு பாபு சுவாமியுடன் இணைந்து சரஸ்வதி, டாக்டர் உமா மகேஸ்வரி, பாக்யலட்சுமி ஆகியோர், வேஷ்டி, சட்டை, சேலையை 200 பேருக்கு வழங்கினர். இனிப்பு, காரம் வழங்கப்பட்டது.