உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மாவட்ட செஸ்:380 பேர் பங்கேற்பு

 மாவட்ட செஸ்:380 பேர் பங்கேற்பு

கோவை, கோவை மாவட்ட அளவிலான செஸ் போட்டி சிங்காநல்லுார் எஸ்.ஜெ.எஸ்.வி. பள்ளியில் நேற்று நடந்தது. இதில், 7, 10, 13, 17, 20 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர் பிரிவுகளில், 380 பேர் பங்கேற்றனர். எஸ்.ஜெ.எஸ்.வி. பள்ளிகளின் முதல்வர்கள் சுஜாதா, கீதா துவக்கி வைத்தனர். மாணவர்களுக்கு 7 சுற்றுகளாகவும், மாணவியருக்கு 6 சுற்றுகளாகவும் போட்டிகள் நடந்தன. ஒவ்வொரு பிரிவிலும், 20 கோப்பைகள், சிறந்த வீரர், வீராங்கனைகள் என, 143 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. செஸ் சங்க செயலாளர் தனசேகர் ஏற்பாடுகளை கவனித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி