மேலும் செய்திகள்
மாவட்ட சதுரங்க போட்டி
11-Nov-2024
திருப்பூர் மணி செஸ் பவுண்டேசன், கொங்கு கரங்கள் டிரஸ்ட் சார்பில், மணி செஸ் டிராபிக்கான, மாவட்ட சதுரங்க போட்டி, திருப்பூர் மங்கலம் ரோடு, பெரியாண்டிபாளையத்தில், நடந்தது.ஒன்பது, 12, 16 மற்றும் பொது ஆகிய நான்கு பிரிவுகளில் நடந்த போட்டியில், மாவட்டம் முழுதும் இருந்து, 120க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். 'நாக் அவுட்' சுற்று முடிவில், இறுதிப்போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடம் பெற்றவருக்கு, 1,500 ரூபாய், இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் பெற்றவருக்கு முறையே ஆயிரம் மற்றும், 800 ரூபாய் வழங்கப்பட்டது.பொதுபிரிவில் ஆர்வமுடன் பங்கேற்ற ஆறு மற்றும் ஏழு வயது குழந்தைகளுக்கு சிறப்பு பரிசு வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டது. - நமது நிருபர் -
11-Nov-2024