உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பயன்பாடற்ற போர்வெல்களில் மழைநீர் சேமிக்கலாம்! அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுரை

பயன்பாடற்ற போர்வெல்களில் மழைநீர் சேமிக்கலாம்! அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுரை

பொள்ளாச்சி; ''ஊராட்சிகளில் பயன்படுத்தாத நிலையில் உள்ள போர்வெல்களை கண்டறிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என, மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.பொள்ளாச்சி அருகே, சுப்பேகவுண்டன்புதுாரில் உலக தண்ணீர் தினத்தையொட்டி, கிராம சபை கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பவன்குமார் பங்கேற்று பேசியதாவது:ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது.கோவை மாவட்டத்தில் பல பகுதிகளில் நிலத்தடிநீர், குறிப்பிட்ட அளவுக்கு கீழே சென்று விட்டது. நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துதல், மழைநீரை சேமித்தல் உள்ளிட்டவை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.ஊராட்சிகளில் பயன்படுத்தாத நிலையில் உள்ள போர்வெல்களை கண்டறிய, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களும், தங்களுடைய நிலங்களில் பயன்பாடு இல்லாத போர்வெல்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்.மழைநீரை இந்த போர்வெல்கள் வாயிலாக, மறு சுழற்சி செய்து நிலத்தடி நீரை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.சமூக நலத்துறையின் சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு ெஹல்ப்லைன் - '1098' அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக உடனடியாக இந்த எண்ணில் தெரிவிக்கலாம்.கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் பள்ளியின் தலைமையாசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர், அங்கன்வாடி பணியாளர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.இனிவரும் இரண்டு மாதங்கள் வெயில் காலம் என்பதால் குழந்தைகள், வயதானோர், காலை, 11:00 மணி முதல் மாலை, 3:00 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். காலை அல்லது மாலை நேரங்களில் வெளியில் செல்லலாம். தினமும், 3 - 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.ஒவ்வொரு கிராம ஊராட்சிகளுக்கும், கலைஞரின் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஊராட்சி அலுவலகத்தில் செயலாளரை தொடர்பு கொண்டு கிரிக்கெட், வாலிபால், பேட்மிட்டன், செஸ், கேரம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்களை பெற்று விளையாடலாம். இளைஞர்களிடம் விளையாட்டை ஊக்குவிக்க இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.இவ்வாறு, பேசினார்.தொடர்ந்து, சுப்பேகவுண்டன்புதுார் கிளை நுாலகம், முதல்வர் மருந்தகம், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடையை கலெக்டர் ஆய்வு செய்தார். கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழி எடுக்கப்பட்டு, துாய்மை பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

கோடையை சமாளிக்கலாம்!

மாவட்ட கலெக்டர், நிருபர்களிடம் கூறியதாவது:கோவை மாவட்டத்தில், குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறை புகார் வந்தால், உடனடியாக சரி செய்ய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.கோடை காலத்தை சமாளிக்க, அணைகளில் போதுமான தண்ணீர் உள்ளது. நீர்வளத்துறை, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசித்து, குடிநீர் சீராக வழங்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.பட்டா நிலங்களில், 'அவுட்காய்' பயன்படுத்துவது குறித்து வனத்துறை, போலீசார், வருவாய்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து, அதுபோன்று இருந்தால் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும்.இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ