உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாவட்ட ஹாக்கி போட்டி: சி.எஸ்.ஐ. அணி வெற்றி

மாவட்ட ஹாக்கி போட்டி: சி.எஸ்.ஐ. அணி வெற்றி

கோவை: வருவாய் மாவட்ட அளவில் நடந்த ஹாக்கி போட்டியில், சி.எஸ்.ஐ. பெண்கள் மேல்நிலைப் பள்ளி வென்றது. பள்ளி கல்வித்துறை சார்பில், வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகள், இரு நாட்களுக்கு முன் நடத்தப்பட்டன. ஹாக்கி போட்டியில், சி.எஸ்.ஐ., பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர் பங்கேற்றனர். 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில், இறுதிப் போட்டியில் பாரதிய வித்யா பவன் அணியுடன் மோதியதில், 3--0 என்ற கோல் கணக்கில் வென்றது. 14 வயதுக்கு உட்பட்ட இறுதிப் போட்டியில், மடோனா மெட்ரிக் பள்ளி அணியுடன் நடந்த போட்டியில், 3--1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் நடந்த போட்டியில், ஈஷா மெட்ரிக் பள்ளி அணியுடன் மோதியதில், இரண்டாம் இடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணியினரை, பள்ளி நிர்வாகத்தினர் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை