மேலும் செய்திகள்
கலைத்திருவிழா போட்டி
15-Oct-2025
கோவை: இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், 27ம் தேதி துவங்கிய கலைத்திருவிழா போட்டி இன்றுடன் (அக். 30) நிறைவடைகிறது. பிளஸ் 1, பிளஸ் 2, 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், நேற்று ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெற்றது. இதில், 600 முதல் 700 மாணவர்கள் பங்கேற்றனர். மாறுவேடம், பேச்சுப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், நாட்டுபுற நடனப் பிரிவில் தனி நபர் நடனம், குழு நடனம், நாடகம், வண்ணம் தீட்டுதல், களிமண் சிற்பம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. அன்னுார், சூலுார் உள்ளிட்ட 15 ஒன்றியங்களில் இருந்து மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர் . மாவட்ட அளவில் வெற்றி பெறும் ஆரம்பப்பள்ளி (1 முதல் 5ம் வகுப்பு) மாணவர்களுக்கு கரூர் மாவட்டத்திலும், 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சேலம் மாவட்டத்திலும், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புதுக்கோட்டை மாவட்டத்திலும் இறுதி போட்டிகள் நடைபெற உள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாக கலைத்திருவிழா போட்டியில் மாநில அளவில் கோவை மாவட்டம் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. இந்தாண்டும் மாநில அளவில் கோவை மீண்டும் முதலிடம் பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இறுதி போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் வெளிநாட்டு கல்வி சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
15-Oct-2025